Monday 26 October 2020

இன்றைய ராசிபலன் - 26.10.2020..!!!

SHARE


மேஷம்

மேஷம் : எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்பு உயரும்நாள்.


ரிஷபம்

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள் . உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தி
யோகத்தில் உங்களின் கோரிக்கை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மிதுனம்

மிதுனம் : கடந்த இரண்டு நாட்களாகஇருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய பாதை தெரியும்நாள்.


கடகம்

கடகம் : சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


சிம்மம்

சிம்மம் : சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


கன்னி

கன்னி  : அனுபவ பூர்வமாகவும்  அறிவுபூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.


துலாம்

துலாம் :  ஆடம்பர செலவுகளைகுறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டு அறிவீர்கள். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும் . நினைத்தது நிறைவேறும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்  : எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராதஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும்நாள்.


தனுசு

தனுசு  : குடும்பத்தினருடன் ஆலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம்உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்குவித்திடும் நாள்.


மகரம்

மகரம் : கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தெரியும் நாள்.


கும்பம்

கும்பம் :  ராசிக்குள் சந்திரன்இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம்.வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து
கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டியநாள்.


மீனம்

மீனம் : சில காரியங்களை அலைந்துதிரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன்எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

SHARE