Wednesday 11 November 2020

மேல் மாகாணத்தில் ரயில், பஸ் சேவைகள் இடைநிறுத்தம்..!!!

SHARE


நவம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை எந்த நபரும் மேல் மாகாணத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்திலிருந்து அனைத்து ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று கோவிட் – 19 நோய்த் தொற்றைத் தடுக்கும் தேசிய செயலணியின் (NOCPCO), தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இருப்பினும், மாகாண மேற்கு மாகாணத்திற்குள் நுழையும் தனிநபர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 30ஆம் திகதி மேல் மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.

மேல் மாகாணத்திற்குள் கோவிட் -19 நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இன்று முற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
SHARE