யாழில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு..!!!


யாழ் சாவகச்சேரி பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். திருமண நிகழ்வொன்றில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படடுள்ளது. எனினும் விதிமுறைகளை மீறி, சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் உரியசுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய திருமண வீட்டாரையும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here