Sunday 22 November 2020

”பிட்டு (புட்டு)” ஏன் சமூக வலைத்தளத்தில் பிரபல்யமானது?

SHARE


கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தமிழர்கள் அதிகளவில் பிட்டு குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஏன் திடீரென பிட்டு தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது?   

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்த கருத்தே, இந்த பிட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட காரணம் என தெரியவருகின்றது.

”யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக, சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு, பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்”

என நீதிமன்றத்தில் பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விரும்பி உண்ணும் பிட்டு குறித்து கருத்து தெரிவித்ததை அடுத்து, அவருக்கு என்ன தெரியும்? என்ற கோணத்திலேயே இந்த பிட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.

”பீட்சா தின்னுறதில அப்பிடி என்ன பெருமை? புட்டில் எத்தனை வகையிருக்கு, அதில் எத்தனை ரக சுவையிருக்கு என்று தெரியாத அறியாமை” என பிரபல வானொலி அறிவிப்பாளர் கனாதீபன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.


 

 







SHARE