கொரோனா; மேலும் பல கொத்தணிகள் உருவாகலாம் : அவதானமாக இருக்க எச்சரிக்கை..!!!


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாகும் அபாய நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர இது தொடர்பில் தெரிவிக்கையில்;

நாடளாவிய ரீதியில் மேலும் கொத்தணிகள் உருவாகாமல் தடுப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நிலையில் அந்த நிறுவனத்திலுள்ள அனைவருக்கும் அது பரவுவதை காணமுடிகின்றது.

இந்த நிலை, மேலும் சில கொத்தணிகள் உருவாகும் அபாய நிலையை தோற்றுவித்துள்ளது. அதன்படி, பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலைகள் மற்றும் கடற்படையினருக்குள்ளும் இவ்வாறான கொத்தணிகள் உருவாகலாம்.

அதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நாட்டில் 25 இரசாயன கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 14 இரசாயன கூடங்கள் அரசாங்க மருத்துவமனைகளிலும் சுகாதார அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களிலும் செயற்படுகின்றன.

மேலும் 02 இரசாயன கூடங்கள் கொத்தலாவல பாதுகாப்பு பீடத்திலும் கொத்தலாவல இராணுவ ஆஸ்பத்திரியிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

மற்றும் நான்கு பல்கலைக்கழகங்களிலும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி அரசாங்கத்தின் கீழுள்ள 20 நிறுவனங்களிலும் ஐந்து தனியார் நிறுவனங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post Next Post


Put your ad code here