வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..!!!


உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இன்று தீபாவளி பண்டிகையை மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் தத்தமது வீடுகளில் கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகையானது வெற்றி விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அதாவது தேவர்களுக்கு சதா கொடுமை செய்து வந்த நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி என்பது ஐதீகம்.

உலக இந்துக்களால் நரகாசூரனை வதம் செய்த நாள் தீபாவாளியாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி நாளில் இனிப்பு, புத்தாடைகள், அன்புக்குரியவர்களை வாழ்த்துவது என அனைவரும் மகிழ்ந்திருப்பார்கள். இந்த நல்ல நாளில் செல்வ செழிப்போடு இருக்க, வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரிப்பது வழக்கத்தில் உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட்டங்கள் குறைந்துவிடும் என்றாலும், தங்கள் அன்புக்குரியவர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்த்துவதை யாரும் தவறவிடக்கூடாது.

அந்தவகையில் உலகையே அச்சுறுத்தி இலட்சக்கணக்கான மரணங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமான கொரோனா எனப்படும் இந்தக் கொடிய வைரஸை உலகில் இருந்தும் ஒழித்துக்கட்ட நாம் அனைவருமே திட சங்கற்பம் பூண வேண்டும்.  அதற்கு ஒரே வழி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதும் பிறருக்கு அது பரவாது கவனமாக இருப்பதுமேயாகும்.

முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த தீபாவளியை தமிழ் மக்கள் கொண்டாட முடியாத நிலையில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் முற்றுமுழுதாக ஒழிக்கப்படும் நாளே உண்மையான வெற்றித் திருநாளாக அனைவருக்கும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.  

 சுகாதார நெறிமுறைகளை பேணுமாறு ஏனையோருக்கும் அறிவுரை வழங்குவோம்.

அடுத்த தீபாவளியையேனும் நாம் உற்றார், உறவினர்களுடன் அன்பாகவும் இன்பமாகவும் வெற்றித் திருநாளாக கொண்டாட இன்றே இந்த கொடிய அரக்கனை ஒழித்துக்கட்ட திடசங்கற்பம் பூணுவோம்.

தீபாவளி பண்டிகை தீமைக்கு எதிராக போராடவும், நன்மையின் பாதையை பின்பற்றவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த நாள் உங்கள் வாழ்வை அமைதியுறச் செய்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்துடன் ஒளிரச் செய்யட்டும். அந்தவகையில் யாழ்தேவி   இணையவாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Previous Post Next Post


Put your ad code here