யாழில் களவாடப்பட்ட 50 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு..!!!


கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் களவாடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பெற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ.நெவில்பியந்த தலைமையிலான குழுவினரே களவாடப்பட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








 

Previous Post Next Post


Put your ad code here