யாழ்ப்பாணம் கோவில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி இன்று முதல் போக்குவரத்து மீள திறக்கப்பட்டுள்ளது.
நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக கடந்த 08ஆம் திகதி முதல் அந்த வீதியினூடாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோவில் வீதியுடாகச் செல்லும் சிறிய வாகனங்கள் செட்டித்தெரு வீதி செட்டித்தெரு ஒழுங்கை ( சின்மயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் செட்டித்தெரு ஒழுங்கை செட்டித்தெரு ஊடாகவும் பயணித்தன.
இந்நிலையில் தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்ததமையை அடுத்து குறித்த வீதி போக்குவரத்துக்காக மீள திறக்கப்பட்டுள்ளது.