மின்சாரத்தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, நாளை காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ். நல்லூர்க் கந்தசுவாமி கோவில், கைலாசப் பிள்ளையார் கோவில், அரசடி பழம் வீதிச் சந்தி, நாவலர் வீதி- இராசாவின்தோட்டம், பருத்தித்துறை வீதி, றக்கா வீதி, சுண்டிக்குளி, இராமநாதன் வீதி புகையிரதக் குறுக்குச் சந்தி, றக்கா வீதி, பிரிட்டிஷ் கவுன்சில், இயற்கை விஞ்ஞான பீடம், விஞ்ஞான பீடம், தியாகி அறக்கொடை நிலையம், றியோ ஐஸ் கிறீம் ஆகிய பகுதிகளிலும்,
நாளை காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். சாவகச்சேரி நகரம், சாவகச்சேரி பிரதேச செயலகம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்ற வளாகம், அரசடி, மருதடி, ஆசிரியர் வீதிச் சந்தி, டச்சு வீதி, சுண்டுவில், கச்சாய் வீதி, கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் பிரதேசம் , சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில், நுணாவில், நுணாவில் வைரவர் கோவில் பிரதேசம், சாவகச்சேரி பெருங்குளம் சந்தி, சாவகச்சேரி தபால் அலுவலகம் சந்தி, புகையிரதநிலைய வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.