தொடர்ச்சியாக 14 நாள்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் நாடுமுழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.
அதன் செயலாளர், மருத்துவர் நவிந்த சொய்சா இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இன்று மருத்துவ வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட சிறப்புக் கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்