முல்லைத்தீவில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்யாமல் தலைமறைவாகியுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்..!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தேடிக் கண்டறியும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17.05.2021 ஆம் திகதி இரவு 11.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

இன்றுடன் இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும் மக்கள் தனிமைப்படுத்தல் விதியினை சரியாக நடைமுறைப்படுத்த தவறிவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here