இலங்கையில் 7 பேரில் ஒருவருக்கு கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!!


இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கொள்கை தொடர்பான நிறுவனமொன்று அதிர்ச்சி தரும் வகையிலான் ஆய்வு முடிவொன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது, நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் போது 7 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செற்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here