கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கே 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் பெர்ல் ( X-PRESS PEARL) என்ற சரக்குக் கப்பல் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதையடுத்து குறித்த கப்பலுக்கு உதவும் வகையில் இலங்கை கடற்படையின் இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் ஒரு வேகப் படகு ஆகியவை இப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.
தற்போது, இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த கப்பல், 2021 மே 15 ஆம் திகதி இந்திய துறைமுகமான ஹசிராவிலிருந்து 1486 கொள்கலன்களையும் பிற ரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் கொண்டு சென்ற போது கொழும்பு கடற்கரையில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் நேற்று நங்கூரமிட்டபோது தீ விபத்து ஏற்பட்டது.
கப்பலில் உள்ள 25 பேரில் பிலிப்பினோக்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் ரஷ்யர்கள் அடங்குகின்றனர்.
கப்பலில் இரசாயனங்கள் கசிந்ததற்கு ஏற்பட்ட எதிர்வினையால் இந்த தீ ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news