Wednesday 21 July 2021

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி செய்ய வேண்டுமா? 20 நிமிடம் போதும்... அசத்தலாம்..!!!

SHARE

நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி வரலையா? கவலைய விடுங்க. இன்று ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  1. தேங்காய் - 1 கப் (துருவியது)
  2. பச்சை மிளகாய் - 1
  3. இஞ்சி - 1 சிறிய துண்டு
  4. சீரகம் - ஒரு சிட்டிகை
  5. உப்பு - தேவையான அளவு
  6. தாளிப்பதற்கு கடுகு - 1 டீஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை - சிறிது
  9. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.
SHARE