யாழ்ப்பாணத்தில் கடந்த 9 நாட்களில் 423 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 9 நாட்களில் 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்பயைடில், ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 423 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை - 01 - 36 பேர்

ஜூலை - 02 - 41 பேர்

ஜூலை - 03 - 63 பேர்

ஜூலை - 04 - 71 பேர்

ஜூலை - 05 - 25 பேர்

ஜூலை - 06 - 64 பேர்

ஜூலை - 07 - 50 பேர்

ஜூலை - 08 - 25 பேர்

ஜூலை - 09 - 48 பேர்

இவ்வாறு இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் மேலும் 423 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஜூலை 09 வரையான நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஜூலை 01 முதல் 09 வரையான நாட்களில் மட்டும் இவ்வாறு 12 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜூலை - 01 - 4 மரணங்கள்

ஜூலை - 02 - 2 மரணங்கள்

ஜூலை - 04 - ஒரு மரணம்

ஜூலை - 05 - ஒரு மரணம்

ஜூலை - 06 - 3 மரணங்கள்

ஜூலை - 07 - ஒரு மரணம்

இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஜூலை-09 வரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,

மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 33 பேர்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர்
Previous Post Next Post


Put your ad code here