இந்தியாவில் மின்னல் தாக்கி 68 பேர் பலி..!!!


இந்தியாவின் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை பதிவான மின்னல் தாக்க சம்பவங்களில் மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் பலத்த மின்னல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 41 ஆக உயர்ந்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் ஏழு பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில், ஏழு பேர் கோட்டா மற்றும் தோல்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவர்.

மேலும் அங்கு 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');