முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கோர விபத்து..!!!


A-9 வீதியில் முறிகண்டி பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டபோதும், விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் முறிகண்டி பிள்ளையார் கோவிலில் வணங்குவதற்காக ஆலயத்திற்கு நேர் வீதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

வாகனத்தின் சாரதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில், வாகனத்தில் சிலர் இருந்துள்ளனர். இந்த நிலையில் வீதியால் பயணித்து பால கட்டுமான பணிக்காக கொங்கிறிற் தூண் ஏற்றிய கனரக வாகனம்

நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் வான் பலத்த சேதங்களிற்கு உள்ளான போதிலும் வானில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டனர்.

சம்பவம் இடம்பெற்றதை அடுத்து குறித்த கனரக வாகனம் வீதிக்கு குறுக்கே நின்றமையால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை

மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');