12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி – அரசு பரிசீலனை..!!!


12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனைத் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது;

நாட்டில் முறையே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்.

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தடுப்பூசி நிதியத்துக்கு நிதியளிப்பதில் அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கோவிட்-19 நோயினால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் மற்றும் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை முன்னுரிமை அளித்துள்ளது.

வளர்ந்த நாடுகளும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இதேபோன்ற நடைமுறையை பின்பற்றுகின்றன.

தடுப்பூசி மூலம் அரசு தனிப்பட்ட இலாபத்தை எதிர்பார்க்கவில்லை – என்றார்
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');