பண்ணை பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டார்- தேடும் பணி தொடர்கிறது..!!!


யாழ்ப்பாணம் – தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு 7 மணி தாண்டியும் வீழ்ந்தவரைத் தேடும் பணி தொடர்கிறது.

ஆரம்ப விசாரணைகளில் அவர் யாழ்ப்பாணம் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாற்றுபவர் என்று தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post


Put your ad code here