சந்நிதியில் உணவளிக்க விரும்புவோரை தொடர்பு கொள்ள கோரிக்கை..!!!


வரலாற்று சிறப்பு மிக்க செல்வச் சந்நிதி ஆலய சூழலில் வாழும் முதியவர்களுக்கு உணவளிக்க விரும்புவோரை தம்மை தொடர்பு கொள்ளுமாறு செல்வச் சந்நிதி கலாமன்ற நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செல்வச்சந்நிதி ஆலய சூழலில் வசிக்கும் முதியவர்கள் ,மற்றும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்த சந்நிதியான் ஆச்சிரமம் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின் பற்ற தவறினார்கள் என கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நிலையில் ஆலய சூழலில் வசிக்கும் முதியவர்கள் , அடியவர்களுக்கு செல்வச்சந்நிதி கலாமன்றத்தினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உணவுகளை பொதியிட்டு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையிலையே , அடியவர்கள் முதியவர்களுக்கு உணவளிக்க விரும்புவோரை கலாமன்ற தலைவர் (0778340605) , செயலாளர் (0778590980) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை சந்நிதியான் ஆலய கொடியேற்றம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. திருவிழாவில் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதியில்லாதவர்கள் ஆலய சூழலுக்குள் உள்செல்ல அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்படுகின்றனர். ஆலய சூழலில் பொலிஸார் , இராணுவத்தினர் , சுகாதார பிரிவினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here