டிப்பர் வாகனம் மோதி இளம் குடும்பப் பெண் பலி – கோப்பாயில் சம்பவம்..!!!


கோப்பாய் - கைதடி வீதியில் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றது.

கணவரும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளம் குடும்பப் பெண் வீதியில் வீழ்ந்து தலைப்பகுதியில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Previous Post Next Post


Put your ad code here