வெளியில் தேவையின்றி நடமாடாதீர்: அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!!


டெல்டா திரிபு கொரோனா பரவும் நிலையில் மக்கள் சீக்கிரம் தடுப்பூசியை பெறுமாறும் அநாவசியமாக வெளியே நடமாட வேண்டாமெனவும் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு, கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.

முதலாம் கட்ட தடுப்பூசிகளை விரைவில் பெறவும்.

அநாவசியமாக பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளவும்

மிகவும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மாத்திரம் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வெளியில் செல்லவும்

பொது இடத்திற்கு செல்லும் போதும், வெளியில் பயணம் செய்யும் போது எப்போதும் முகக்கவசம் அணியுங்கள்

அறைகள், அரங்குகள், லிஃப்ட் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கவும்

எப்போதும் உங்கள் கைகளை சவர்க்காரமிட்டு கழுவவும்.

2 மீற்றர் சமூக இடைவெளியை பின்பற்றவும்

உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் இருந்தால், வேலையைத் தவிர, வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');