வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்களுக்கு பொருந்தும் தனிமைப்படுத்தல் விதிமுறை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பார்வையாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நட்சத்திர விடுதி (ஹோட்டல்) அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் அல்லது சுகாதார பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள்.
முழுமையாக தடுப்பூசி போட்ட பின்னர் வருபவர்கள் நாட்டுக்கு வருகை தந்த பின் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
பரிசோதனையில் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தால், கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்தவர்கள் அல்லது இரண்டு டோஸ் எடுக்காதவர்களும் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தொற்று இல்லை என பிசிஆர் முடிவைக் கொண்டவர்கள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.
எவ்வாறாயினும், நாட்டுக்கு வந்தவுடன் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையின் முடிவு தொற்று உள்ளதாக கிடைத்தால் மற்றும் வருகையின் போது தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தாலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலின் முடிவில் தொற்று உள்ளதாக முடிவு உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறை இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு பொருந்தும் என்றும் சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.