எரிபொருள் விலையை அதிகரிக்கவேண்டிய நிலை – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்..!!!


தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார்.

ஓகஸ்ட் 31ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 70 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதே முக்கிய தீர்வு என்று அவர் தெரிவித்தார்
Previous Post Next Post


Put your ad code here