லிட்ரோ நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்திருந்தது. இந்நிலையில் குறித்த விலையில் தற்போது திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் மறுசீரமைக்கப்பட்ட புதிய விலை ரூ.2,675 (75 ரூபா குறைப்பு)
5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் மறுசீரமைக்கப்பட்ட புதிய விலை ரூ.1,071 (30 ரூபா குறைப்பு)
2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் மறுசீரமைக்கப்பட்ட புதிய விலை ரூ.506 (14 ரூபா குறைப்பு)