நாட்டில் எதிர்வரும் மூன்று நாள்களுக்கு மழை வீழ்ச்சி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகில் உள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதே இதற்கு காரணம் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, நாளைய தினம் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது