Thursday 7 October 2021

மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!!!

SHARE

இதுவரை செலுத்தப்படாது நிலுவையிலுள்ள மொத்த மின்கட்டணத் தொகையை ஒருவருட காலத்துக்குள் செலுத்தி முடிப்பதற்கான நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே இன்று (07) சபையில் அறிவித்தாா்.

கொரோனா நிலைமை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்துவதற்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏதாவதொரு தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? என்று நாடாளுமன்ற உறுப்பினா் முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனைக்கு குறிப்பிட்டாா்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த இரு மாதங்களில் மாத்திரம் மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய பணத்தொகையில் 44 பில்லியன் ரூபாக நிலுவையில் இருக்கின்றது.

இருந்தபோதிலும், கொள்கை அடிப்படையில் நிலுவை மின்சார கட்டணங்கள் இருப்பவர்கள் அந்தக் கட்டணத்தொகையை 12 மாதங்களில் மீள் செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் அதற்கான சுற்றறிக்கையும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் செலுத்தப்படாமல் நிலுவை கட்டணங்கள் இருக்குமாக இருந்தால் மொத்த தொகையை 12 மாதங்களுக்கு பிரித்து ஒவ்வொரு மாதமாக கட்டணத்தை செலுத்தி முடிக்கவேண்டும். ஆனால், மாதாந்தம் செலுத்த வேண்டிய கட்டணத்தொகையையும் முறையாக செலுத்த வேண்டியது அவசியமென வலியுறுத்தினாா்.
SHARE