வட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்..!!!


உலகில் உள்ள அனைத்து கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கும் வட்ஸ்அப் செயலியானது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

சமூக வலைத்தளங்களிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப்பில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டேதான் இருக்கிறது மெட்டா நிறுவனம்.

அந்த வகையில் தற்போது புதிய அம்சங்கள் அதில் இணையவிருக்கின்றன.

அதாவது, பேஸ்புக், இஸ்டாகிராம் போன்றவற்றில் இருப்பது போல, சொட் பொக்ஸில், பயனாளர்கள் தங்களது பாவனைகளை வெளிப்படுத்தும் எமோஜிகளை அனுப்பும் புதிய வசதி அறிமுகமாகிறது.

வட்ஸ்அப்பில் விரைவில் பயனாளர்கள் எமோஜிகளை, தோலின் நிறத்தை தேர்வு செய்து அனுப்பும் வகையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, வட்ஸ்அப்பில் அனுப்பும் கோப்புகளின் அளவை அதிகரிக்கவும் முன் வந்துள்ளது. தற்போது வெறும் 100 MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். இது இனி 2 GB ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

ஒரே நேரத்தில் 32 பேருடன் குரல் அழைப்பு செய்யும் வசதியும் வருகிறது. தற்போது குரல் அழைப்பில் வெறும் 8 பேரை மட்டுமே சேர்க்க முடியும்.

ஒரு குழுவில் ஏதேனும் ஒரு பயனாளர், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தகவலை அனுப்பினால் அதனை குரூப் அட்மினே அழிக்கும் வசதி விரைவில் வரவிருக்கிறது. இதனால் குரூப் அட்மின்களுக்கு தொல்லை தீர்ந்தது.

ஒரு பயனாளரின் பெயரை நமது வட்ஸ்அப் பட்டியலில் சேர்க்காமலேயே, அவருக்கு குரல் பதிவில் தகவல் அனுப்பும் வசதியும் வருகிறது.

இவையெல்லாம் எதிர்வரும் வாரத்தில் அப்டேட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here