யாழ்.மாவட்ட நிவாரண உதவிகள் தொடர்பிலான மாவட்ட செயலரின் அறிவிப்பு..!!!


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக யாழ். மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78444 குடும்பங்களிற்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1900 ரூபா ,3200 ரூபா ,4500 ரூபா பெறுமதியான நிவாரண உதவிக் கொடுப்பனவு தொகையாக 225,162,020 ரூபா மாதாந்தம் சமுர்த்தி வங்கிகளினால் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு உலக வங்கியின் நிதி உதவியுடன் மூன்று மாதங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவிக் கொடுப்பனவிற்கு மேலதிகமாக நிதிக் கொடுப்பனவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3100 ரூபா ,3100 ரூபா, 3000 ரூபா என மொத்தமாக 239,277,600 ரூபா மேலதிகமாக சமுர்த்தி வங்கிகளுக்கு 26.05.2022 ஆம் திகதி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வைப்பிலிடப்பட்டு மே மாத கொடுப்பனவு சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 1-2 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 1900 ரூபா கொடுப்பனவு 3100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5000 ரூபாவாக வழங்கப்படும்.3 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3200 ரூபா கொடுப்பனவு 3100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 6300 ரூபாவாக வழங்கப்படும்.நான்கிற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4500 ரூபா கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 7500 ரூபாவாக வழங்கப்படும்.

மேலும் குறைநத வருமானம் பெறுகின்ற சமுர்த்தி நிவாரணம் பெறத் தகுதியான காத்திருப்பு பட்டியலில் உள்ள 27978 குடும்பங்களிற்கு மூன்று மாதாங்களிற்கு 5000 ரூபா நிதி கொடுப்பனவு சமுர்த்தி வங்கிகளினால் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவு நிதி சமுர்த்தி வங்கிகளிற்கு இன்று வைப்பிலிட மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகிறது என்றுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here