அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத் தவிர, ஏனைய பணியாளர்களை நாளைய தினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த நிலையில் பணிக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஒரு பகுதி அரச ஊழியர்கள் சமூகமளிக்காமல் இருப்பார்களானால், எரிபொருளை மீதப்படுத்த முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.