யாழ்.நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் மகாராணியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு..!!!


யாழ்ப்பாணம் - நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களது சேவைகளைப் பாராட்டி 1953ஆம் ஆண்டு பிரித்தானியாவின் 2ஆம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மாகாராணிக்கு மேற்படி பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி உரையை ஆற்றியிருந்தார்.












Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');