புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால், வடக்குப் பாதையில் புகையிரதம் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகையிரதம் வெல்லவ பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கோட்டை நோக்கி செல்லும் புகையிரதங்கள் மஹவ வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து வடக்கு பாதையில் செல்லும் புகையிரதங்கள் குருநாகல் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.