
யாழில் உணவகங்களில் திடீர் பரிசோதனை யாழ் மின்சாரநிலைய வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள உணவகங்கள் யாழ்மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று வியாழக்கிழமை திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடான முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது. |
மேலும், திகதி காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







