பாடசாலை மாணவர்களுக்கு இடையில் விவசாய ஆர்வத்தினை தூண்டும் வகையில் புதிய வெளிச்சத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுத்தொகையும் வழங்கும் நிகழ்வு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றிபெற்ற வடமராட்சி பிரதேச பாடசாலையை சேர்ந்த மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பாடசாலை அதிபர்
திரு T கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் ,இந்நிகழ்வானது வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன்தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த இயற்கை விவசாய பயிற்றுநர்களான திரு பாமாயன் மற்றும் திரு சுந்தரராமன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.