மதி சுதாவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை இலங்கையில் வெளியிட தடை..!!!


வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஈழ சினிமா இயக்குநர் மதிசுதாவின் இயக்கத்தில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் உருவாகிய ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை குறித்த திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகி வரும் நிலையில் குறித்த திரைப்படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் குறித்த திரையரங்குகளுக்கு அறிவித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தடை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினால் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த திரைப்படமானது திரையரங்குகளில் திரையிட தடைவிதிக்கப்பட்டதற்கு எதிராக பலரும் தமது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



‘வெந்து தணிந்தது காடு’ சர்வதேச விருதுவிழாக்களைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஈழத்துத் திரைப்படம்..!!!
Previous Post Next Post


Put your ad code here