ஆசிரியர் இடமாற்றங்கள் - கல்வியமைச்சின் அறிவிப்பு ..!!!



கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள் 2022 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தொற்றுநோய் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி ஆசிரியர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறெனினும் இந்த இடமாற்ற நியமனங்கள் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது.

இது தொடர்பான விரிவான அறிவிப்பு சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தற்சமயம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here