
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிக்கங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றே லொறியுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.