ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு இந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டப வளாகத்தில் 27 அடி உயரத்தில் 8 வகை உலோகங்களால் ஆன நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அறிவியல், விண்வெளி ஆகியவற்றுடன் தொடர்புடையதை குறிக்கும் வகையில் இந்த உலகின் மிக உயரமான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டது என்பது சிறப்பம்சம்.
உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி-20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடக்க உள்ளது.
மேலதிக தகவல்
சிவபெருமானின் நடராஜ ரூபம் என்பது நடன கலையின் தெய்வமாக போற்றப்படுவதாகும்.
ஆனால் நடராஜர் ரூபம் என்பது மதம், ஆன்மிகம் என்பதைத் தாண்டி அறிவியலுடன் தொடர்புடையதாகும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூலவராக நடராஜர் இருக்கிறார்.
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாகவும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது.
இந்த ஆலயம் மனித உடலுடன் தொடர்புடையதாக இந்த கோவில் அமைப்பட்டுள்ளது என்பது தான் தனிச்சிறப்பாகும்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைமையகத்திலும் 17 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
Tags:
india