நேற்றைய தினத்தை விட இன்று (செப். 07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 316.27 ஆகவும், ரூ. 328.06 ஆகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (06) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 315.93 ஆகவும், ரூ. 327.51 ஆகவும் காணப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.
அதேநேரம், ஏனைய பிரதான நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி ஏற்ற-இறக்கத்துடன் இன்று காணப்படுகிறது.
Tags:
sri lanka news