யாழில் 6 மாத பெண்குழந்தை உயிரிழப்பு..!!!



மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது.

திருநெல்வேலி, கலாசாலை வீதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த வெள்ளிக்கிழமை (22) இரவு 11.30 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனால் பெற்றோர் குழந்தையை இரவு 12 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளதோடு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here