யாழில். தேநீர் அருந்திக் கொண்டிருந்த வங்கி உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு..!!!



இலங்கை வங்கி உத்தியோகத்தரான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

இதில் தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த பாலசுந்தரலிங்கம் மதனகுமார் (வயது- 41) என்பவரே உயிரிழந்தவராவார்.

ஒட்டுசுட்டான் இலங்கை வங்கிகிளையில் நிறைவேற்று உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் அவர் நேற்று சனிக்கிழமை நண்பகல் கொடிகாமம் பகுதியில் தேநீர் அருந்தி கொண்டிருந்ததாகவும் உடல் நலகுறைவு காரணமாக முச்சக்கரவண்டி ஒன்றில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு செல்லும்போது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரணவிசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைகளை மேற்கொள்வார். சடலம் பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here