எரிபொருள் மற்றும் தங்கம் விலைகளில் திடீர் மாற்றம்..!!!


ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.

புதிய விலையானது சமீபத்தில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.


ஜப்பான், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையாகவும் உள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here