வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரை..!!!


இன்று(30) யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வாகனம் பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த தாயும் மகளும் வீதியை கடக்கமுற்பட்ட போது ஹயஸ் அந்த விபத்தை தவிர்ப்பதற்கு ஹயஸ் வாகனத்தை வீதியின் மற்ற திசைக்கு திருப்பிய போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய தீயில் ஹயஸ் வாகனமும் தீப்பற்றியது.

மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்த நிலையில் எரிகாயங்களுடன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட தாயும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு சிறுமிகள் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட ஐந்து பேர் பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஹயஸ் வாகனத்தின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



Previous Post Next Post


Put your ad code here