புகையிரதத்துடன் கார் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்..!!!


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதுண்ட நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கூழாவடியில் உள்ள புகையிரத கடவை புகையிரதம் செல்லும் நேரத்தில் மூடப்படாத நிலையில் அதன் ஊடாக கடக்க முனைந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இதன்போது காரினை செலுத்திச்சென்றவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரத கடவையில் கடமையாற்றும் புகையிரத கடவையாளர் இன்மையினால் தொடர்ச்சியாக கடவை ஊடாக பயணிப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பில் பல தடவைகள் ஊடகங்கள் வாயிலாக கொண்டுவரப்பட்டபோதிலும் இதுவரையில் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
Previous Post Next Post


Put your ad code here