மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய பாராட்டுக்கள் கிடைக்கப் போகிறது. வேலையில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தை முன்னேற்ற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். மனதில் சந்தோஷம் தங்கும். முன்னோர்கள் வழிபாடு இறை வழிபாடு நல்லபடியாக நடக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உங்களை நீங்களே இன்று உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு ஈடுபாடு காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். பெரியவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எதிலும் உஷாராக இருப்பீர்கள். உங்களுடைய சிந்தனை நேர்மறையாக இருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே கணிக்கும் திறமையும் உங்களிடத்தில் வெளிபடும். இந்த நாள் இனிய நாள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். ஆனால் பயந்து பயந்து நேரத்தை வீணடிப்பதை விட, பயப்படக்கூடிய நேரத்தில் உங்களுடைய கடமைகளை சரியாக செய்தால் போதும். நல்லதே நடக்கும். கடவுளின் மீது பாரத்தை போடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள் நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி காரர்களுக்கு இன்று துணிச்சல் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளை வீழ்த்துவதில் உங்களுடைய திறமை வெளிப்படும். பேசிப் பேசி நிறைய விஷயங்களை சாதித்து விடுவீர்கள். யாரைக் கண்டும் கொஞ்சம் கூட அஞ்ச மாட்டீர்கள். மேலதிகாரிகளாக இருந்தாலும் சரி அல்லது தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் சரி, உங்கள் பேச்சு வெட்டு வென்று தூண்டு இரண்டு என்று வெளிப்படும். இதனால் நிறைய எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஜாக்கிரதை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் வெளிப்படக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். மீண்டும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் தேவையற்ற பிரச்சனைகள் விலகும். மன நிம்மதி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நீங்கள் ரொம்ப பாக்கியசாலிகள். உங்களுக்கு தேவையான உதவிகள் கேட்காமலே கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். கேட்ட இடத்தில் உதவி இல்லை என்ற வார்த்தை வரவே வராது. கடவுள் உங்களுக்கு இன்று நிச்சயமாக துணை இருப்பான். பிரச்சனைகளை தீர்த்து வைப்பான் கவலை படாதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத பொருட்களை வாங்கவே வாங்காதீங்க. மனதை ஒருநிலைப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பெண்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் வருமானம் வந்து உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுடைய மனது இன்று உறுதியோடு செயல்படும். ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து தடுமாற மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக முடித்து விடுவீர்கள். வயதானவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மூன்றாவது நபர்களுடைய ஆலோசனையினால் நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை வெற்றியை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வேண்டுதல் நிறைவேறும் நாள். குடும்பத்தோடு இன்று கோவில் குளத்திற்கு சென்று நேரத்தை செலவழிக்க வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி வேலை வியாபாரத்தில் எல்லாம் பெரிசாக பிரச்சனையே இருக்காது. அது அது அந்த நேரத்தில் நடக்கும். ஆரோக்கிய குறைபாடு இருந்தால் மட்டும் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.
Tags:
Rasi Palan