யாழில். அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம்..!!!


இவ் வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கொக்குவில் பகுதியில் பெண் ஒருவர் மரணமானார். இவரது மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்ததையடுத்து இவ்விடயம் கோப்பாய் போலீசார் ஊடாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மரண விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் பணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனையும் இடம் பெற்றது. எனினும் குறித்த பெண்ணினுடைய மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என தெரிய வந்ததை தொடர்ந்து அவருடைய உடலை அவருடைய கணவரிடம் கையளிக்குமாறும் குறித்த பெண்ணை தகனம் செய்யுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. எனினும் விளக்கமின்மை காரணமாக குறித்த பெண்ணினுடைய உடலம் அடக்கம் செய்யப்பட்டிருந்தது குறித்த பெண் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்ததாலும் அவருடைய உடல் தகனம் செய்யப்படுவதற்கு பதிலாக அடக்கம் செய்யப்பட்டு இருந்ததாலும் அவருடைய கணவர் தன்னுடைய மனைவியுடைய உடலை மீண்டும் அகழ்ந்து எடுத்து தகனம் செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் மூலம் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரணைக்கு எடு எடுத்திருந்த மாவட்ட நீதிமன்றம் பெண்ணினுடைய கணவருடைய கோரிக்கையை ஏற்று அவருடைய மனைவியினுடைய உடலை மீண்டும் தோண்டி எடுத்து தகனம் செய்யுமாறு கட்டளை வழங்கி இருந்தது.

இக் கட்டளையின் பிரகாரம் இன்றைய தினம் கோப்பாய் போலீசாரின் முன்னிலையில் நல்லூர் பிரதேச சபை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் சட்டத்தரணிகள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் வழக்கில் சட்டத்தரணி T.நீதன் அனுசரணையில் சட்டத்தரணி மகேஸ்வரன் மயூரன் முன்னிலையாகியிருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here