மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சோர்வு வரும் பொழுதிலும், அதிலிருந்து விடுபடுவதற்கு உண்டான வழிமுறைகளை பின்பற்றுவீர்கள். இந்த நாள் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். நிம்மதியாக இந்த நாள் கடந்து செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். எதிரி தொல்லை விலகும். நிதிநிலைமை சீராகும். தேவையான அளவு கையில் பணம் இருக்கும். எதிர்கால சேமிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடம் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் உழைத்த உழைப்பிற்கு உண்டான பலனையும் பெறுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பல நாள் கஷ்டங்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நிதி நிலைமை சீராகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன மறதி உண்டாக வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலைகளை கவனமாக செய்யுங்கள். முக்கியமான பொருட்களை பத்திரமாக எடுத்து வையுங்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது அவசரம் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் திறமையாக சிந்திப்பீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். வசீகரத் தோற்றத்தால் இன்று அனைவரையும் கவரக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இந்த நாள் அழகான நாளாக அமையும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் இனிதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் டென்ஷன் கோபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சின்ன சின்ன தோல்விகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. விடாமல் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி அடையலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய விஷயங்களை சிந்தித்து மனதில் சஞ்சலத்தோடு இருப்பீர்கள். வேலையில் ஆர்வம் செலுத்த முடியாது. வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியாது. இதனால் சின்ன பின்னடைவு உண்டாகலாம். மனதை அலைபாய விடக்கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தெரியாத மனிதர்களுடைய பேச்சைக் கேட்டு எந்த முயற்சிகளையும் செய்ய வேண்டாம். தெரியாத விஷயத்தில் காலை வைக்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தை முன்னேற்றி செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். புது வாய்ப்புகள் உங்களுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு நல்ல பாதையை காட்டிக் கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்
Tags:
Rasi Palan
