யாழில். 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விற்று தீர்ப்பு.!!!



யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெட்ரோலை பெற்று சென்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு செய்யப்படுவதனால் , 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீட்டர் பெட்ரோல் கொலன்னவளையில் இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் , இன்றைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here