ஜூலை மாதத்தின் இறுதியில் உள்ளோம். 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ளன. ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதமானது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. மேலும் இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அதுவும் சூரியன், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய 6 கிரகங்களும் நிலைகளை மாற்றவுள்ளன. இந்த கிரக பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாக ஆகஸ்ட் மாதம் முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது மிகவும் சாதகமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். உங்களின் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். இதனால் மனம் மகிழ்ச்சி அடையும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடடு சூழல் உற்சாகம் நிறைந்து இருக்கும். நிதி ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது சிறப்பானதாக இருக்கும். அதுவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமான தம்பதிகளிடையேயான உறவு வலுவடையும். குடும்பத்தினருடன் ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.
Tags:
Rasi Palan
