ஏப். 19 2ஆம் தவணையே யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் மீள ஆரம்பம்..!!!


இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் வரும் வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக எல்.இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை நாளை தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');